Q17g

[Version 2l (transitory): latest modification at 11:52 on 23/04/2017, train Hamburg-Paris]

TVG Bio-data

[Part 5 of TIPA file Q17 (and pages 314-316 in volume printed in 2004)]

பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் பற்றி...

பிறப்பு : 22. 01. 1925

தந்தையார் : வேங்கடராம ஐயர்

தாயார் : இலக்குமி அம்மாள்

உடன் பிறந்தார் : தம்பியர் நால்வர், தங்கையர் இருவர்

மக்கள் : மகள் ஒருத்தி, மகன் ஒருவன்

கல்வித் தகுதி

S.S.L.C. 1940

வித்துவான் 1945, முதல் தகுதி - 1000 ரூபாய் பரிசு

B.O.L. 1951, முதல் தகுதி- இலாசரசு பதக்கம்

பண்டிதம் 1953, முதல் தகுதி - 100 ரூபாய் பரிசு

B.O.L.(Hons.), 1958, முதல் தகுதி - அரங்கையா செட்டி பரிசு

பணி

15 ஆண்டு உயர்நிலைப் பள்ளியில் 15 ஆண்டு தமிழ்க் கல்லூரியில்

1979 முதல் பிரஞ்சுக் கலை நிறுவனத்தில் எழுதிய நூல்கள் :

  1. தொல்காப்பியச் சேனாவரையம் வினாவிடை விளக்கம் (1994)
  2. கம்ப ராமாயணத்தில் முனிவர்கள் (1994)
  3. கம்ப ராமாயணத்தில் தம்பிமார்கள் 2 தொகுதிகள் (1995, 1996)
  4. கம்ப ராமாயணத்தில் தலைமைப் பாத்திரங்கள் (1998)
  5. கம்ப ராமாயணப் படலச் சுருக்கம் பால காண்டம் (1999)
  6. அயோத்தியா காண்டம் (1999)
  7. சுந்தர காண்டம் (1999)
  8. உயுத்த காண்டம் (2000)
  9. சீவகசிந்தாமணியின் இலம்பகச் சுருக்கம் (நச்சினார்க்கினியர் உரையை எஞ்சாமல் உட்கொண்டு எழுதப்பட்டது) (2002)

பதிப்பித்த நூல்கள் : (மாணாக்கர் தாமே பயில்வதற்குத் தேவையான விரிவான விளக்கங்களுடன்)

  1. இலக்கண விளக்கம் - எழுத்ததிகாரம் (1970)
  2. 6 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம் (1971)
  3. இலக்கண விளக்கம் - பொருளதி காரம் (1972)
  4. அகத்திணையியல் 2 தொகுதிகள் (1972)
  5. புறத்திணையியல் (1972)
  6. அணியியல் (1973)
  7. செய்யுளியல் (1974)
  8. பாட்டியல் (1974)
  9. இலக்கணக் கொத்து உரை (1973)
  10. பிரயோக விவேக உரை (1973)
  11. திருஞான சம்பந்த தேவாரம் - சொற் பிரிப்பு நிறுத்தக் குறிகளுடன் (1984)
  12. திருநாவுக்கரசர் தேவாரமும், சுந்தர மூர்த்தி சுவாமிகள் தேவாரமும் - சொற் பிரிப்பு, நிறுத்தக் குறிகளுடன் (1985)
  13. தேவார ஆய்வுத் துணை தேவாரம் பற்றிய விரிவான செய்திகளுடன் (1991)

மொழிபெயர்ப்புக்குத் துணை :

  1. S.R. பாலசுப்பிரமணியன் அவர்களின் ஆங்கில நூலின் சோழர் காலக் கலைப்பணி - தமிழ் ஆக்கம்
  2. ஆலன்டேனியலுவின் ‘மணிமேகலை’ ஆங்கில மொழிபெயர்ப்பு
  3. சேனாரையத்தின் பிரெஞ்சு மொழி ஆக்கம்

வெளிவர வேண்டியவை :

  1. வீரசோழிய உரை - விரிவான விளக்கங்களுடன் (1988)
  2. திருமங்கை மன்னனுடைய ஆறு பிரபந்தங்களுக்கும் மணிப்பிரவாள நடையில் வரையப்பட்ட பெரிய வாச்சான் பிள்ளை அவர்களின் உரைக்குத் தெளிவான தமிழாக்கம் - தேவையான விளக்கங்களுடன் (1993)
  3. மாறன் அலங்காரம் - பழைய உரையுடன், தேவைப்படும் விரிவான விளக்கங்ளுடன் (1995)
  4. மாறன் அகப்பொருளும் திருப்பதிக் கோவையும் - புதிதாக எழுதப்பட்ட உரை விளக்கங்களுடன் (1998)
  5. இலைமறை கனிகள் - இலக்கணக் கட்டுரைகள் - புதுச்சேரி மாத இதழாகிய தெளி தமிழில் வெளிவந்தவை (2002)